Categories
சினிமா தமிழ் சினிமா

ஓரமாக உட்கார்ந்து இருக்கும்… “தளபதி விஜயை பாருங்க”… வைரலாகும் போட்டோ!!

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்களுடன் நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூரில் உள்ள அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 129 நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களை நடிகர் விஜய் சந்தித்தார்.. அப்போது வெற்றி பெற்றவர்களுக்கு தமது வாழ்த்துக்களை கூறிய நடிகர் விஜய் போட்டோவும் எடுத்துள்ளார்..

இந்நிலையில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கதினர் 129 பேர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றதாக மாநில பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதுமட்டுமில்லாமல் நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்ட போட்டோவையும் பதிவிட்டார்..

இந்த புகைப்படத்தில் விஜய் முதல் வரிசையில் ஓரமாக மாஸாக உட்கார்ந்து இருக்கிறார்.. இந்த புகைப்படத்தை தற்போது விஜய் ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்டவர் நடிகர் விஜய். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர்.. நடிகர் விஜயின் படம், டிரைலர், டீசர் என அவர் குறித்து ஏதாவது ஒன்று வந்தால் அதனை ட்ரெண்ட் செய்வது இவர்களது வழக்கம். அதன்படி தற்போது இந்த போட்டோவை ட்ரெண்ட் செய்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

முன்னதாக சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்பது தொடர்பாக விஜய் கூடிய விரைவில் அறிவிப்பார் என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |