Categories
சினிமா மாநில செய்திகள்

தேர்தலில் வெற்றி… “ஆனால் இப்படி செய்யக்கூடாது”… வாழ்த்து சொல்லி எச்சரித்த நடிகர் விஜய்!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய், அவர்கள் தவறு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு நடிகர் விஜய் வலியுறுத்தியுள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 129 நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களை சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூரில் உள்ள அலுவலகத்தில் நடிகர் விஜய் சந்தித்தார்.

அப்போது வெற்றி பெற்றவர்களுக்கு தமது வாழ்த்துக்களை விஜய் கூறினார். 2.1/2 மணி நேரமாக நடைபெற்ற சந்திப்புக்கு பின்பு, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க மாநில செயலாளர் புஸ்சி ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் மொத்தமாக 129 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என்றார்.

2 ஊராட்சி மன்ற தலைவர்கள் 12 ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் வெள்ளிக்கிழமை தேர்வாகியுள்ளதாக ஆனந்த் கூறினார். வெற்றிபெற்ற நிர்வாகிகள் தவறு செய்தால் கண்டிப்பாக அமைப்பின் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் எச்சரித்துள்ளதாகவும் ஆனந்த் தெரிவித்தார். சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்பது தொடர்பாக விஜய் கூடிய விரைவில் அறிவிப்பார் என்றும் ஆனந்த் தெரிவித்தார்.

Categories

Tech |