Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தலில் யாரும் போட்டியிடவில்லை…. சபதம் எடுத்த கருணாஸ்…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!

நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை சார்பாக யாரும் போட்டியிடவில்லை என்று அச்சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இந்நிலையில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும், திரைப்பட நடிகருமான கருணாஸ் நடைபெறவிருக்கும் இத்தேர்தலில் தங்கள் கட்சி சார்பாக யாரும் போட்டியிட போவதில்லை என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது முக்குலத்தோர் சமுதாயத்திற்கு துரோகம் இழைத்த அண்ணா திமுகவை நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தோற்கடிக்க சபதம் போட்டுள்ளதாக கருணாஸ் கூறியுள்ளார்.

ஆனால் இந்த தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை சார்பாக யாரும் போட்டியிட போவதில்லை. அதற்கு பதிலாக 234 தொகுதிகளில் வசிக்கும் மக்களிடம் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் வழியாக அண்ணா திமுகவின் எதிர்பார்ப்பையும், நமது கோரிக்கையையும் எடுத்து செல்ல வேண்டும். இதற்காக அந்தந்த தொகுதிகளில்  தகுதியுடைய  நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும் என்று முக்குலத்தோர் புலிப்படை சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்ட அந்த அறிக்கையில் தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

Categories

Tech |