நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், உள்ளாட்சி தேர்தலில் பெண் வேட்பாளர்களை மிரட்டுகிறார்கள் என்று குற்றம் சாடியுள்ளார்.
தமிழகத்தில் அக்டோபர் 6, 9 தேதிகளில், விடுபட்ட மாவட்டங்களுக்கு 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இலங்கை தமிழர் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த திலீபனின் நினைவு நாளானது போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டபோது, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, “இனிமேல் அரசியலானது என்னை மையப்படுத்தி தான் இருக்கும். திமுகவினர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் ஆட்களை கடத்துகின்றனர். மேலும் பெண் வேட்பாளர்களையும் அவர்கள் மிரட்டி வருகின்றனர். இதனால்தான் நாங்கள் தலைமறைவாக இருக்கின்றோம். அவர்கள் பணமும் அரசு வேலையும் தேர்தலில் விலகி இருந்தால் தருவதாக கூறுகின்றனர்” என்ற பரபரப்பான குற்றச்சாட்டை திமுகவின் மேல் வைத்துள்ளார்.