நேற்று விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரைக்கு வந்த தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் புதிய பேருந்து நிலையம் கட்டுவது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். மேலும் திமுகவுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளதா ? என்பது பற்றிய ரகசியத்தையும் உடைத்துள்ளார்.
அதாவது போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு நூற்றுக்கு நூறு சதவிகிதம் வெற்றி வாய்ப்பு உள்ளது. அதில் எந்த விதமான மாற்றமும் கிடையாது” என்று கூறியுள்ளார்.