Categories
மாநில செய்திகள்

“தேயிலைத் தோட்டத்தில் ஒரு சுசீலா” பல மொழிகளில் பாடி அசத்தும் பெண்மணி…. குவியும் பாராட்டு….!!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் ரெஜினா லூக்காஸ் (48) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில் தேயிலை பறிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் சிறு வயது முதலே இசையின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக பாடல்களை பாடி வருகிறார். அதன் பெண் ரெஜினா தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி மற்றும் படுகர் இன மக்களின் மொழியிலும் பல்வேறு பாடல்களை பாடி வருகிறார். இவர் பல முறை மேடைகளில் பாடுவதற்கு வாய்ப்பு தேடியுள்ளார்.

ஆனால் ரெஜினாவுக்கு மேடைகளில் பாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் மனம் தளராத ரெஜினா தான் வேலை பார்க்கும் நேரத்தில் தன்னுடன் வேலை பார்க்கும் சக பணியாளர்களுக்கு களைப்பு தெரியக்கூடாது என்பதற்காக தனக்கு தெரிந்த பாடல்களை பாடுவார். இந்நிலையில் தோட்டத்தில் பாடி கொண்டிருக்கும் போது அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் அதை வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக ரெஜினாவிடம் கேட்டபோது எனக்கு சிறு வயது முதலே பாட வேண்டும் என்று ஆசை இருந்தது. பாடகி சுசிலா மீது எனக்கு மிகுந்த பற்று இருக்கிறது. ஆனால் எனக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் ஆலயங்கள் மற்றும் சில விழாக்களில் பாடுகிறேன். என்னுடைய கணவர் மற்றும் குடும்பம் எனக்கு என்றுமே உறுதுணையாக இருக்கிறார்கள். நிச்சயம் எனக்கு ஒரு நாள் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.மேலும் சமூக வலைதளங்களில் ரெஜினாவின் பாடல் வைரலானதை தொடர்ந்து அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |