தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் குணமடைந்தார். இந்த நிலையில் நேற்று இரவு விஜயகாந்த் அவர்கள் மீண்டும் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வருகின்றனர். விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
Categories
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி…. வெளியான தகவல்….!!!!
