Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு… இளைஞர்களுக்கு மூன்று கோடி ரூபாய் கடன் மானியம்….!!!!

படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடன் மானியம் பெறலாம் என ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் தொழில் மையம் மூலமாக இளைஞர்களுக்கு 3 கோடி கடன் மானியம் வழங்கப்பட்டது. இதுகுறித்து ஆட்சியர் முரளிதரன் செய்திக் குறிப்பை வெளியிட்டிருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது, படித்து வேலை இல்லாமல் உள்ள இளைஞர்களுக்கு தொழில் தொடங்கவும் தொழில்முனைவோர்களாக மாற்ற தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

20 சதவீத மானியத்துடன் மாவட்ட தொழில் மையம் மூலமாக வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் சென்ற வருடம் மே மாதத்தில் இருந்து தற்போது வரை புதியதாக தொழில் முனையும் இளைஞர்களுக்கு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 31 இளைஞர்களுக்கு 12 கோடியே 13 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் கடன் உதவியாக வழங்கப்பட்டிருக்கிறது.

மேலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் 159 பேருக்கு 5 கோடியே 69 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் கடனாக வழங்கப்பட்டிருக்கிறது. ஆகையால் தேனி மாவட்டத்தில் படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி இதன் கீழ் கடனுதவி பெற்று பயன்பெறலாம் என அதில் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |