Categories
உலக செய்திகள்

தேனிலவுக்காக சென்ற தம்பதி…. மலை உச்சியில் இருந்து கீழே விழுந்து இறந்த பரிதாபம்…. பெரும் சோகம்…!!!

கர்ப்பிணி மனைவி இறந்த விவகாரத்தில் அவருடைய கணவர் மீது கொலை குற்றம்  சுமத்தப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு மலைக்கு கடந்த 2021-ம் ஆண்டு அன்வர் மற்றும் திகதி என்ற தம்பதியினர் தேனிலவுக்காக சென்றுள்ளனர். இதில் திகதி கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென திகதி மலையில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்டது. இதற்கு திகதியின் கணவர் அன்வர் தான் காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டது. ஏனெனில் மலை உச்சியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த திகதியின் உடம்பில் பல காயங்கள் இருந்துள்ளது.

அது மட்டுமின்றி அன்வருக்கும் திகதிக்கும் இடையே ஏற்கனவே குடும்ப தகராறு இருந்துள்ளது. இதன் காரணமாக அன்வர் நீண்ட நாட்களாக திகதியை மோசமான முறையில் நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த குற்றங்கள் அனைத்தையும் அன்வர் மறுத்துள்ளார். மேலும் அன்வர் மீதான கொலை குற்றசாட்டு வருகிற 2023-ம் ஆண்டு விசாரணை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |