Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தேனியில் விதிகளை மீறி செயல்பட்ட 3 வணிக நிறுவனங்கள்”…. அபராதம் விதித்த அதிகாரிகள்….!!!!!

தேனியில் விதிகளை மீறி செயல்பட்ட 3 வணிக நிறுவனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தார்கள்.

தேனி மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் சிவகுமார் தலைமையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டார்கள். இதில் மாவட்டத்தில் உள்ள 24 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 3 நிறுவனங்களில் பொட்டல பொருட்கள் விதி மீறல்கள் செய்யப்பட்டது தெரியவந்தது.

இதை தொடர்ந்து அந்த மூன்று நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு தலா ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து உதவியாளர் சிவகுமார் கூறியுள்ளதாவது, இது போன்ற ஆய்வுகள் அடிக்கடி நடத்தப்படும். விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

Categories

Tech |