தேனி நகரில் கடந்த ஒரு வாரமாக நோய்த்தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. சுமார் 500 பேருக்கு மேலாக தேனி நகரில் நோய் தொற்று ஏற்பட்டு உள்ளது. இதில் தேனி நகரின் மூன்றாவது வார்ட் பாலநகரின் ஒரே தெருவில் 46பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு இறந்த உறவினர்கள் பார்க்க சென்றனர் இரண்டு ஆட்டோக்களில் 25க்கும் மேற்பட்டோர் நெருக்கமாக அமர்ந்து கொண்டு சென்று திரும்பினர்.
இதில் ஒருவருக்கு நோய் தொற்று உறுதி செய்ய பட்டதனையடுத்து அவருடைய பயண முறையை ஆய்வு செய்த போது ஆட்டோக்களில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் யாருடனெல்லாம தொடர்பில் இருந்தார்கள் என்பதை பார்த்த போது ஒரே தெருவில் உள்ள 46 நபர்களுக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து நகராட்சி அதிகாரிகள் அந்தப் பகுதி முழுவதுமே தடுப்பு வேலிகளால் அடைத்து கிருமிநாசினி தெளித்து வருகின்றனர்.