36 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் பற்றி வெள்ளிக்கிழமை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, 26 தங்கப் பதக்கங்கள் உட்பட 74 பதக்கங்களுடன் 36 ஆவது தேசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு ஐந்தாம் இடத்தை பிடித்திருக்கிறது. களத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களது திறன்களை வெளிப்படுத்தி கடும் உழைப்பினால் சிறப்பான முடிவுகளை வழங்கியுள்ள நமது தமிழக வீரர்களை எண்ணி பெருமிதம் அடைகிறேன். மேலும் அடுத்து வரும் போட்டிகளிலும் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துவது மட்டுமல்லாமல் எனது முழு ஆதரவும் அவர்களுக்கு இருக்கும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Categories
தேசிய விளையாட்டுப் போட்டிகள்… “தமிழக வீரர்களை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்”…முதல்வர் ஸ்டாலின் ட்வீட் பதிவு…!!!!!
