Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தேசிய மரத்தை வெட்டுவதற்கு எதிர்ப்பு… அரியலூரில் போராட்டம்…!!

அரியலூரில் 25 ஆண்டுகள் பழமையான ஆல மரத்தை வெட்டுவதற்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பல இடங்களில் மரங்களை வெட்டுவது தொடர்கதையாகி வருகின்றது. இதற்கு சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தேவையில்லாத காரணங்களுக்காக மரங்களை வெட்டுவது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று. அரியலூரில் 25 ஆண்டு கால பழமையான ஆல மரத்தை வெட்டுவதற்கு அந்த ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொய்யூர் செல்லும் சாலையில் பள்ளி கிருஷ்ணாபுரம் அருகே இந்த மரம் உள்ளது. உயரழுத்த மின்சார பாதை செல்வதற்காக யாருக்கும் தெரியாமல் மின்சார துறையினர் மரத்தின் கிளைகளை வெட்டியுள்ளனர். இதற்காக அந்த ஊரை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |