இந்தியாவில் தேசிய பென்சன் திட்டத்தை பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான பிஎஃப்ஆர்டிஏ நிர்வகிக்கிறது. இந்த திட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் இணைந்து பயன்பெறலாம். இந்த திட்டத்தின் படி ஒருவர் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், பணியில் இருந்து ஓய்வு பெறும் போது தன்னுடைய பென்ஷன் தொகையில் 60 சதவீதத்தை எடுத்துக் கொள்ளலாம். அதன்பின் மீதுமுள்ள பணத்தை ஆண்டு தொகை வாங்கி ஓய்வூதியமாக பெறலாம்.
இந்தப் பணத்தை எடுப்பதற்கான விதிமுறைகளை தற்போது பிஎஃப்ஆர்டிஏ திருத்தியுள்ளது. இதுவரை ஓய்வூதிய திட்டத்தில் இருக்கும் பணத்தை எடுப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டால் 4 நாட்களுக்குள் கோரிக்கை செயல்படுத்தப்படும். ஆனால் புதிய விதிப்படி ஓய்வூதியத்தில் உள்ள பணத்தை எடுப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டால் 2 நாட்களுக்குள் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவதுடன், விரைவில் பணத்தை எடுத்துக் கொள்ளவும் முடியும்.