தேசிய பாதுகாப்பு தின விழாவில் கலந்து கொண்ட தொழிலார்களுக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோவிலூர் பகுதியில் அமைந்துள்ள டி.சி.பி. லிமிடெட் தொழிற்சாலையில் 51-வது தேசிய பாதுகாப்பு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேலாளர் கணேஷ், உதவி பொது மேலாளர் பாலசுந்தரம், தொழிற்சாலை மருத்துவர் தயாளன், துணை மேலாளர் மதியழகன், கார்த்திக், சந்திரசேகர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் துணை மேலாளர் சிவகுமார் உறுதிமொழியை வாசித்து விழாவில் கலந்து கொண்ட தொழிலாளர்களுக்கு பரிசுகளை வழங்கியுள்ளார். இந்த விழாவின்போது தொழிலாளர் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு உபகரணங்கள், தீயணைப்பு கருவிகள் போன்றவை வைக்கப்பட்டுள்ளது.