சென்னையில் இருந்து தென்காசி சென்று ஆம்னி பேருந்து திருச்சி அருகே விபத்துக்குள்ளானது. ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்த இந்த விபத்தில் சக்தி என்ற இளைஞரின் கால் துண்டாகியுள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு வந்த போலீசார் கிரேன் உதவியுடன் பேருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பேருந்து அதிவேகத்தில் வந்து திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்து கவர்ந்ததாக தெரியவந்துள்ளது.
மேலும் படுகாயம் அடைந்த பத்துக்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.அதில் ஒரு சிலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.