சிரோன்மணி அகாலிதளம் கட்சியை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து ஜனநாயக ஜனதா கட்சியும் விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் விவசாயிகள் நலனை முன்னிறுத்தி தேர்தல் களத்தை சந்திக்கும் இரு கட்சிகளும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. பாரதிய ஜனதா அரசு விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறி மத்திய அமைச்சரவையிலிருந்து சிரோன்மணி அகாலிதளம் விலகியது. தற்போது அரியானாவில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்து ஆட்சி பொறுப்பில் உள்ள துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலாவுக்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத்கவுர் பாதல் பதவி விலகிய போன்று ஹரியானா துணை முதல்வர் பதவியில் இருந்த துஷ்யந்த் சவுதாலா விலக வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் விஜய்பால வலியுறுத்தியுள்ளார்.
விவசாயிகளைவிட பதவிதான் முக்கியம் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனிடையே கடந்த 10ஆம் தேதி குருஷேத்திரா விவசாயிகள் மீது நடத்தப்பட்ட போலீஸ் தடியடி ஜனநாயக ஜனதா கட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ளது. அக்கட்சி எம்.எல்.எக்கல் சிலர் துஷ்யந்த் சவுதாலாக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் பாரதீய ஜனதா உடனான உறவை ஜனநாயக ஜனதா கட்சி துண்டித்துக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.