Categories
உலக செய்திகள்

தேசிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனம்… பெட்ரோலிய கண்காட்சி… இந்திய அரங்கம் இன்று திறப்பு…!!!!!

 தேசிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனம் சார்பாக சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் மாநாடு இன்று தொடங்க உள்ளது.

அபுதாபி தேசிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனம் உலகின் முன்னணி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த நிறுவனம் சார்பாக சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் மாநாடு இன்று தொடங்க இருக்கிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த எரிசக்தி துறை அமைச்சர்கள் மற்றும் சர்வதேச எரிசக்தி நிறுவனங்களின் தலைவர்கள் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் போன்றோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த கண்காட்சியில் கலந்து கொள்ளுமாறு இந்தியாவிற்கு ஐக்கிய அரபு அமீரக அரசு அழைப்பு விடுத்திருக்கின்றது.

அந்த நாட்டின் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு துறை அமைச்சர் சுஹைல் முகமது பராஜ் அல் மஸ்ரூயி விடுத்த அழைப்பை ஏற்று இந்தியா சார்பில் மத்திய பெட்ரோலியம் இயற்கை எரிவாயுதுறை அமைச்சர் பூரி இன்று ஐக்கிய அரபு அமீரக நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். இந்த நிலையில் தனது பயணத்தின் போது அபுதாபி சர்வதேச பெட்ரோலிய கண்காட்சியில் இந்திய பெட்ரோலியம் தொழில் கூட்டமைப்பு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து அமைத்திருக்கின்ற அரங்கையும் அவர் திறந்து வைத்திருக்கின்றார்.

இந்த கண்காட்சியில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எரிசக்தி துறை அமைச்சர்கள் எரிசக்தி நிறுவனங்களின் தலைவர்களையும்அவர் சந்திக்க இருக்கின்றார். மேலும் ஐக்கிய அரபு அமீரகம் இந்தியா இடையான எரிசக்தி துறை ஒத்துழைப்பை வலுப்படுத்த அந்த நாட்டு அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர்  விரிவான ஆலோசனை மேற்கொள்வார் என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுதுறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |