இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை குறிக்கும் வகையில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 31-ஆம் நாளை தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடுகிறோம். இந்தியாவில் வசிக்கும் மக்கள் இனம், மொழி, சாதி, மதம், பாகுபாடு இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை இந்த நாள் குறிக்கும். தேசிய ஒற்றுமை நாள் அக்டோபர் 31-ஆம் தேதி(நாளை) கொண்டாடப்பட உள்ளது. ஜாதி, மதம், இனம், மொழி, பாகுபாடு ஆகியவை இல்லாமல் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதே தேசிய ஒருமைப்பாடு.
இந்தியா பல்வேறு மொழிகள் கலாச்சாரங்கள் மற்றும் இனங்களை கொண்டுள்ள நாடு ஆகும். தேசிய ஒருமைப்பாட்டின் மூலம் பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்தலாம். ஒரு நாட்டின் பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், சமூக பரிமாணங்களில் தேசிய ஒருங்கிணைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலம் மக்களிடையே அமைதி, சகோதரத்துவம், சகிப்புத்தன்மை ஆகியவை உறுதிபடுத்தப்படுகிறது. தேசத்தின் மக்கள் இனம், ஜாதி, மதம், மொழியால் வேறுபட்டிருந்தாலும் தேச ஒருமைப்பாட்டு தினம் அனைவரும் ஒன்றாக இருப்பதை குறிக்கிறது. இந்த நவீன காலகட்டத்தில் தேசிய ஒருங்கிணைப்பு என்பது முக்கிய பங்கு வகிக்கிறது.
உலகளாவிய பயங்கரவாதம் தேசிய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. ஒரு தேசத்தை உருவாக்குவதில் தேச ஒருங்கிணைப்புக்கு முக்கிய பங்கு உண்டு. இதனால் வரலாற்றை வளர்ச்சியுடன் நிலைநிறுத்த முடியும். பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில் அனைத்து பிரிவினரும் ஒற்றுமையாக இருப்பது மிகவும் அவசியம். தேசிய ஒருமைப்பாட்டின் நோக்கம் தோழமை உணர்வை அதிகரிப்பதாகும். இது மத, இன மற்றும் கலாச்சார வேறுபாடுகளை குறிக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது