Categories
மாநில செய்திகள்

“தேசிய அளவில்” சிறந்த காவல் நிலையங்கள் பட்டியல் – தமிழகம் 2-வது இடம்…!!

நாட்டிலேயே சிறப்பாக செயலாற்றிய காவல் நிலையங்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு கடந்த 2011ம் வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் நாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது. இந்த விருது, குற்றங்களை கண்டறிதல், குற்றவாளிகளை விரைந்து கைது செய்தல், சட்டம், ஒழுங்கைப் பாதுகாத்தல், விபத்துகளை குறைத்தல், சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டுதல், புகார் அளிக்க வரும் மக்களை வரவேற்கும் முறை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நாட்டிலேயே சிறப்பாக செயலாற்றிய காவல் நிலையங்கள் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தில் சேலம் மாவட்டம் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. வழக்குகளை விரைவாக விசாரித்தல், சடலத்தை உரியவர்களிடம் ஒப்படைத்தல் போன்றவற்றால் 2-வது இடம் கிடைத்துள்ளது. மணிப்பூர் மாநில காவல் நிலையம் முதலிடம் பிடித்துள்ளது.

Categories

Tech |