டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 34 ஆண்டுகளுக்கு பிறகு கல்விக் கொள்கையில் பல்வேறு சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் மும்மொழி திட்டம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் ரீதியில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் புதிய கல்வி கொள்கை குறித்து கவிஞ்சர் வைரமுத்து, அண்ணா – கலைஞர் இறுதி செய்ததும், எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா உறுதி செய்ததும் இருமொழிக் கொள்கைதான். முதலமைச்சர் பழனிச்சாமி அரசும் அதைத் தாங்கிப் பிடிக்கத் தயங்கத் தேவையில்லை. தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம் என ட்விட் செய்துள்ளார்.
அண்ணா – கலைஞர் இறுதி செய்ததும்,
எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா உறுதி செய்ததும்
இருமொழிக் கொள்கைதான்.
முதலமைச்சர் பழனிச்சாமி அரசும் அதைத்
தாங்கிப் பிடிக்கத் தயங்கத் தேவையில்லை.
தேசியக் கொடியை மதிப்போம்;
திராவிடக் கொடியும் பிடிப்போம்.
#TNGovt #NewEducationPolicy #NEP2020 #தமிழ்— வைரமுத்து (@Vairamuthu) August 1, 2020