உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் கோடி மிகவும் முக்கியமானதாகும். இந்த கோட்பாடு இந்திய நாட்டிற்கும் பொருந்தும். நமது தேசியக்கொடியை மூவர்ணக் கொடி என்றும் அழைக்கப்படும். நமது தேசியக் கொடியில் உள்ள மூன்று வண்ணங்களும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய தேசியக்கொடி நமது சுதந்திரத்தையும், தைரியத்தையும், சுதந்திரப் போராளிகளில் போராடிய நீண்ட போராட்டத்தையும் குறிக்கிறது. அதுமட்டுமல்லாமல் நமது தேசியக் கொடியில் உள்ள ஒவ்வொரு நிறத்திற்கும் தனித்தனி அர்த்தம் இருக்கிறது.
அந்த வகையில் நம் தேசியக் கொடி அவமதிப்பு உள்ளாகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளிடம் மத்திய அரசு கூறியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது விளையாட்டு கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் காகிதம் கொண்டு செய்யப்பட்ட தேசியக்கொடியை மட்டுமே பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.
நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் தேசிய கொடிகளை தனிப்பட்ட முறையில் எடுத்துச் சென்று அவற்றை கண்ணியமாக அப்புறப்படுத்த வேண்டும். தேசியக் கொடிகளை கண்ட இடங்களில் வீசி அதை அவமதிப்பு செய்யக்கூடாது. மேலும் இது போன்ற பொது நிகழ்ச்சிகளில் அரசுத்துறைகள், நிறுவனங்கள், பொதுமக்கள் தேசியக்கொடியை எப்படி கையாள்வது என்று தெரியாமல் அவமதிக்கும் காட்சிகளை அவ்வப்போது பார்க்க முடிகிறது. மேலும் தேசிய கொடியை எப்படி கையாள்வது என்று மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. அதனால் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஊடக விளம்பரங்கள் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.