நாட்டின் 75 வது சுதந்திர தினம் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விடுதலை அமுதப் பெருவிழாவை முன்னிட்டு 20 ஆயிரம் கல்லூரி மாணவ மாணவிகள் ஒன்று திரண்டு கையில் தேசியக்கொடியை ஏந்தியபடி ஒரே நேரத்தில் தங்களது செல்போனிலிருந்து சுதந்திர தின வாழ்த்து செய்தியை அனுப்பி உலக சாதனை படைத்துள்ளனர். சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் கல்வி ஒன்றில் இந்த நிகழ்ச்சியை நடைபெற்று உள்ளது .
அங்கு ஒரே சமயத்தில் ஒன்று திரண்ட 20 ஆயிரம் கல்லூரி மாணவ மாணவிகள் கைகளில் தேசியக் கொடியை ஏத்தியபடி ஒரே நேரத்தில் தங்களது செல்போனில் இருந்து சுதந்திர தின வாழ்த்து செய்தியை அனுப்பினர் .மாணவர்களின் இந்த சாதனையை உலக சாதனையாக அறிவித்து உலக சாதனை ஒன்றியத்தின் மேலாளர் கிறிஸ்டோபர் விருது வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாணவர்களை வாழ்த்தி பேசினார். இதுவரை யாரும் செய்யாத மாணவர்களின் இந்த சாதனை இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.