Categories
தேசிய செய்திகள்

தேசியக்கொடியுடன் ஒரு செல்பி…. எவ்வளவு பேர் பதிவேற்றம் செய்தார்கள் தெரியுமா?…. மத்திய அரசு தகவல்….!!!!

இந்தியாவின் 75வது சுதந்திரதின கொண்டாட்டங்கள் “சுதந்திர தின அமுதப் பெருவிழா” என்ற பெயரில் நடப்பாண்டு ஆக. 15ம் தேதி 75 வாரங்களை நிறைவுசெய்யும் பொருட்டு கடந்த வருடம் மாா்ச் 12ம் தேதி தொடங்கியது. இந்நிகழ்வுகள் அடுத்த வருடம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது. இக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பிரதமா் நரேந்திரமோடி சென்ற ஜூலை 22ம் தேதி அனைவரது வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்றும் விதமாக ஆக.13 முதல் 15 வரை “ஹா் கா் திரங்கா” எனும் பிரசாரம் தொடங்கப்படும் என அறிவித்தாா்.

மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் “ஹா் கா் திரங்கா” எனும் பெயரில் இணையத்தளம் ஒன்றை உருவாக்கி, மக்கள் தேசியக்கொடியுடனான சுயபடத்தை பதிவேற்றும்படி கேட்டுக்கொண்டது. இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் 5 கோடிக்கும் அதிகமான சுய படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாக கலாசாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இது தொடர்பாக அந்த துறையின் அமைச்சா் கிஷண்ரெட்டி கூறியதாவது “5 கோடிக்கும் மேற்பட்ட மூவா்ணக் கொடியின் சுய படங்கள் இந்திய நாட்டை முதன்மை இடத்திற்கு கொண்டுசெல்ல இந்தியா்கள் ஏற்றுள்ள கடமையின் கூட்டு செயல்பாட்டின் வெளிப்பாடு” என்று கூறினாா்.

Categories

Tech |