Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தேங்கிய மழை நீரில் மின்சாரம் கசிவு…. 2 தெருநாய்கள் பரிதாப பலி…. அச்சத்தில் மக்கள்….!!!!

சென்னையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று பெய்த மழையால் ஆங்காங்கே மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது. அந்த அடிப்படையில் டி.பி.சத்திரம் 14வது சாலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் சாலை ஓரத்தில் மழைநீர் தேங்கியிருந்தது. அவ்வாறு தேங்கிய மழைநீரில் அருகில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் கசிந்தாக தெரிகிறது. இந்நிலையில் அவ்வழியே வந்த 2 தெருநாய்கள் தேங்கிய மழைநீரில் ஆபத்து இருப்பதை அறியாமல் நீரில் நடந்து சென்றது.

இதனால் மின்சாரம் தாக்கியதில் 2 நாய்களும் தூக்கிவீசப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திலேயே அந்த 2 நாய்களும் பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தகவலின் பேரில் விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் உடனே அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். அதன்பின் இறந்த நாய்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தேங்கிய மழை நீரில் மின்சாரம் பாய்ந்து தெருநாய்கள் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |