தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தானம்பட்டியில் திம்மராயசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தன்(12) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தன் அப்பகுதியில் இருக்கும் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து படுகாயம் அடைந்தான்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.