கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நித்திரவிளை பகுதியில் வசிக்கும் பாபு வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு உஷா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உஷா தனது குழந்தைகள் அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரம் என 5 1/2 பவுன் நகைகளை கழற்றி வீட்டில் அலமாரியில் வைத்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் விபின், வினிஷ், அனீஸ் ஆகியோர் தேங்காய் சிரட்டை வாங்குவது போல உஷாவின் வீட்டிற்கு சென்று நோட்டமிட்டனர். இதனை அடுத்து உஷா வீட்டில் இல்லாத நேரத்தில் வாலிபர்கள் நகைகளை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதனை அடுத்து நகை காணாமல் போனதை கண்டு உஷா அதிர்ச்சடைந்தார். பின்னர் வீட்டிற்கு வெளியே அனீஸின் செருப்பு கிடந்ததை பார்த்த உஷா அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், இரவு நேரத்தில் வீட்டின் வெளிப்புற ஜன்னலை திறந்து வாலிபர்கள் நைசாக நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. பின்னர் அந்த நகைகளை கடை கடையில் அடகு வைத்து ஜாலியாக செலவு செய்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் மூன்று வாலிபர்களையும் போலீசார் கைது செய்து நகைகளை மீட்டனர்.