தேக்கு மரம் என கூறி சாதாரண மரத்தை விற்பனை செய்து 5 1/4 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சக்தி நகரில் வசிக்கும் பாலசுப்பிரமணியம் என்பவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரியில் கூறியிருப்பதாவது, முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியத்தின் பிரிவு 8-ல் பாலசுப்ரமணியம் வீடு கட்டி வருகிறார். அதன் ஜன்னல், கதவுகளை தேக்கு மரத்தில் செய்வதற்காக முடிவு செய்து பாலசுப்பிரமணியம் கடந்த ஜூன் மாதம் தச்சு வேலை செய்யும் ஒருவருடன் சிவகிரியில் இருக்கும் மரக்கடைக்கு சென்றுள்ளார். அவர்கள் கேரள தேக்கு மரம் என்று கூறி ஒரு மரத்தை பால சுப்பிரமணியிடம் காட்டியுள்ளனர்.
அதன் நிறம் வெள்ளையாக இருந்ததால் பாலசுப்பிரமணியனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து கேட்டபோது ஒரு மாதம் காய வைத்தால் தேக்கு நிறம் வந்துவிடும் என அவர்கள் கூறியதை நம்பி பாலசுப்பிரமணியம் 5 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் கொடுத்து அதனை வாங்கியுள்ளார். இதனை அடுத்து அந்த மரத்தின் நிறம் மாறாததால் வேறு ஒரு மரக்கடையில் சென்ற விசாரித்த போது அது சாதாரண பிரேசில் மரம் என்பது தெரியவந்தது. இதனால் தேக்கு மரத்தை விற்பதாக கூறி பணம் மோசடி ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.