Categories
மாநில செய்திகள்

தொண்டு நிறுவனத்தில் பயின்ற 3 மாணவர்கள் திடீரென மாயம்…. போலீஸ் விசாரணை…. பரபரப்பு….!!!!

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகிலுள்ள ஜி.கல்லுப்பட்டியில் தொண்டு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. அதன் இயக்குனராக அந்தோணிபால்சாமி இருக்கிறார். இத்தொண்டு நிறுவனத்தில் சுமார் 500-க்கும் அதிகமான ஆதரவற்ற குழந்தைகள் பயின்று வருகின்றனர்
அந்த தொண்டு நிறுவனத்தில் வத்தலக்குண்டை சேர்ந்த 1 மாணவன், மதுரையை சேர்ந்த சபரீஸ்வரன்(14), ஆதவன் போன்றோர் படித்து வந்தனர். இந்த நிலையில் விடுதியிலிருந்து வெளியே சென்ற இந்த 3 மாணவர்கள் மாயமாகினர்.

இதுபற்றி சக மாணவர்கள் தெரிவித்த தகவலின்படி அவர்களின் வீடுகளுக்கு சென்று அலுவலர்கள் விசாரித்தனர். எனினும் அவர்கள் அங்கும் செல்லவில்லை என தெரியவந்தது. அதனை தொடர்ந்து அந்தோணி பால்சாமி தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவர்களை தேடிவந்தனர். இதில் மாயமான ஒரு மாணவர் திருச்சியில் உள்ளதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்த போது மீதம் 2 மாணவர்கள் எங்கே சென்றார்கள் என்பது தெரியவில்லை.

Categories

Tech |