ஃபிட்னஸ் ட்ரெய்னர் தெலுங்கு நடிகையை பாலியல் பலாத்காரம் செய்ததால் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
ஆதித்யா அஜய் கபூர் என்ற பிட்னஸ் ட்ரெய்னரை பொதுவான நண்பர் மூலம் சந்தித்திருக்கின்றார் தெலுங்கு நடிகை ஒருவர். நண்பர்களாக இருந்த அவர்கள் கால போக்கில் காதலர்களாக மாறி அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. பின்னர் ஆதித்யா உன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த நடிகையை மும்பை மற்றும் கோவாவில் பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றார். பின்னர் அந்த நடிகையை அவர் ஏமாற்றி விட்டார்.
இதனால் அந்த நடிகை ஆதித்யா மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதித்யாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இது குறித்து போலீஸ் அதிகாரி கூறியுள்ளதாவது, ஆதித்யாவுடன் தொடர்ந்து உறவு கொள்ள முடியாது என நடிகை கூறியதால் அவரை தாக்கியுள்ளார் ஆதித்யா. மேலும் நடிகையின் பெற்றோர் செல்போனிற்கு ஆபாச மெசேஜ் அனுப்பி அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். இவரின் தொல்லை தாங்க முடியாமல் அந்த நடிகை காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கின்றார். திருமணம் செய்து கொள்வதாக அந்த நடிகையுடன் உறவு கொண்டிருக்கின்றார் ஆதித்யா. ஆனால் அந்த நடிகை எப்பொழுது திருமணம் செய்து கொள்வீர்கள் என கேட்டதற்கு தொடர்ந்து தன்னிடம் உறவு வைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி இருக்கின்றார் என அதிகாரி கூறியுள்ளார்.