Categories
சினிமா தமிழ் சினிமா

தெலுங்கு திரைப்படத்தில் கால்பதிக்கும் யோகி பாபு…. வெளியான தகவல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

தமிழில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகிபாபு கைநிறைய திரைப்படங்கள் வைத்து நடித்து வருகிறார். அத்துடன் இவர் கதாநாயகனாகவும் நடிக்கிறார். இப்போது இந்தி படத்திலும் யோகிபாபு கால் பதித்துள்ளார். அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இந்தி திரைப்படத்தில் யோகிபாபுவும் இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புக்காக யோகிபாபு மும்பை சென்று தன் காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டு திரும்பியுள்ளார். இந்நிலையில் யோகிபாபுவுக்கு தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது.

பிரபாஸ் இப்போது பெயரிடப்படாத தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். இவற்றில் நாயகியாக மாளவிகா மோகனனை ஒப்பந்தம் செய்து உள்ளனர். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் டிரைக்டராகவும் அவர் முயன்று வருகிறார். தன் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை தொகுத்து படமாக எடுக்க அவர் முடிவுசெய்துள்ளார்.

Categories

Tech |