Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் ரீமேக்காகும் ‘என்னை அறிந்தால்’… ஹீரோ யார் தெரியுமா?…!!!

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் என்னை அறிந்தால் . இயக்குனர் கவுதம் மேனன் இயக்கியிருந்த இந்த படத்தில் திரிஷா, அனுஷ்கா, அருண் விஜய், விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்த படம் தெலுங்கு ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Chiranjeevi starts prepping for Koratala Siva's next | The News Minute

இதில் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை சஹோ பட இயக்குனர் சுஜித் இயக்க உள்ளார் . தற்போது நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் ஆச்சார்யா படம் உருவாகி வருகிறது. இதையடுத்து இவர் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும், தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |