Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் விமான விபத்து… பயிற்சி விமானி பலி…. பெரும் சோகம்…!!!!

பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் தமிழகத்தை சேர்ந்த பயிற்சி விமானி உட்பட  இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தில் இன்று விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் பயிற்சியாளர் உட்பட 2 விமானிகள் உயிரிழந்து உள்ளனர்.   பிளைடெக் ஏவியேஷன் செஸ்னா 152 என்ற விமானமானது ஆந்திர பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள மச்செர்லா என்ற பகுதியில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்த விமானமானது ஹைதராபாத்தில் உள்ள தனியார் ஏவியேஷன் என்ற அகாடமிக்கு சொந்தமானது ஆகும்.

இந்த விபத்தானது கிருஷ்ணா நதியின் நாகார்ஜுன்சாகர் என்ற அணைக்கு அருகில் உள்ள பெத்தவுராவின் துங்கதுர்த்தி என்ற கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. அப்போது அந்தப் பகுதி மக்கள் இந்த விபத்தின் பலத்த சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது சிதைந்த நிலையில் ஹெலிகாப்டர் கிடந்துள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த மகிமா என்ற பயிற்சி விமானி உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், மருத்துவ குழுவினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |