Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் கொட்டிய கனமழை… இடிந்து விழுந்த வீடு… 10 பேர் பலியான சோகம்…!!!

தெலுங்கானாவில் கொட்டி தீர்த்த கன மழையால் ஒரு வீட்டின் மீது காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்து 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தெலுங்கானா மாநிலத்தில் நேற்று கன மழை கொட்டி தீர்த்ததால், பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஹைதராபாத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வருகின்றன. தெலுங்கானாவில் மட்டும் 14 மாவட்டங்கள் வெள்ளத்தால் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டம் பெண்ட்லகுடா நகரத்தில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. அதனால் நேற்று இரவு 10 மணி அளவில் அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டின் மீது காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்துள்ளது.

அதனால் வீட்டில் இருந்த அனைவரும் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்தக் கொடூர விபத்தில் இரண்டு மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதுமட்டுமன்றி சிலர் படுகாயமடைந்துள்ளனர். மீட்கப்பட்டவர்களில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் மீட்பு பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 

Categories

Tech |