மாளவிகா மோகனன் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோரின் நடிப்பில் தயாராகி வரும் ‘மாறன்’ திரைப்படம் குறித்த மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் “மாறன்” திரைப்படத்தின் முதல் பாடல் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தனுஷ் ஓபனிங் பாடலை பாடியுள்ளதாகவும், அவருடன் இணைந்து தெருக்குரல் அறிவு ராப் பாடியுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் விவேக் இந்த பாடலை எழுதியுள்ளதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.