எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகியுள்ள “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் வசூலில் உலக சாதனை படைத்திருக்கிறது.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் ஆகிய முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் சென்ற வெள்ளிக்கிழமை ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியானது.
#RRR is setting new BENCHMARKS… ₹ 500 cr [and counting]… WORLDWIDE GBOC *opening weekend* biz… EXTRAORDINARY Monday on the cards… #SSRajamouli brings back glory of INDIAN CINEMA. Note: Non-holiday release. Pandemic era. pic.twitter.com/ztuu4r9eam
— taran adarsh (@taran_adarsh) March 28, 2022
இத்திரைப்படமானது வெளியாகிய வெறும் மூன்று நாட்களில் ரூ 500 கோடி வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. நாடு முழுவதும் 11,000 தியேட்டர்களில் இப்படம் கடந்த 25ஆம் தேதி வெளியானது. இதற்கு முன் வெளியான அனைத்து இந்திய திரைப்படங்களின் வசூலை முறியடித்து ஒரே நாளில் ரூபாய் 250 கோடி வசூலித்தது. மேலும் வெளியான 3 நாட்களில் “ஆர் ஆர் ஆர்” உலக அளவில் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது.