Categories
தேசிய செய்திகள்

தெரு நாய்கள் கடித்ததில் ஐந்து வயது சிறுமி உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!!

மத்திய பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் சோனியா என்னும் ஐந்து வயது சிறுமி தெருவில் வந்து கொண்டிருந்தபோது சுமார் ஆறு தெரு நாய்கள் சிறுமியை தாக்கியுள்ளது. கூலித்தொழிலாளியான அவரது தந்தை வேலை செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் சிறுமி  தனியாக இருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து சிறுமி பெடியாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அதன் பின் அங்கிருந்து மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சிவில் சர்ஜர் அனார் சிங் சவுகான் கூறியுள்ளார். தெரு நாய் கடித்ததில் ஐந்து வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |