Categories
உலக செய்திகள்

தெரு சண்டைக்காக கைது…. சோதனையில் சிக்கிய பொருள்…. போலீஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தெருவில் சண்டை போட்டதற்காக  கைது செய்யப்பட்ட பெண் தனது பெண்ணுறுப்பில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டன் வோர்செச்டேர்ஷிரேல் மால்வேர்ன் பகுதியைச் சேர்ந்த கௌரா பிரீலி (39) வயதுள்ள பெண் ஒருவர் வசித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி  இவருக்கும் இவர் வசிக்கும் தெருவில் உள்ள மற்றொரு நபருக்கும் தகராறு எற்பட்டுள்ளது. இதனால் கௌரா பிரீலி  போலீசாரால் தேடப்பட்டு வந்துள்ளார். அதன் பின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அவரை  பரிசோதனை செய்த போது 5 கிராம் மதிப்புக் கொண்ட கஞ்சாவை தன்னுடைய பெண்ணுறுப்பில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து அவரிடம் விசாரித்த போது அது வேறொரு பொருள் என்று கூறி மறுப்பு தெரிவித்து பின்னர் அவர் தன்னுடைய சொந்த பயன்பாட்டிற்கு கஞ்சாவை உபயோகிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கபட்ட அவருக்கு 50 பவுண்ட் அபராதமும் தெருச் சண்டையில் அவரால் பாதிக்கப்பட்ட நபருக்கு தேவையான தொகையும் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Categories

Tech |