பழனி அருகில் சாமி சிலைகளை தெருவில் வீசியது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகில் கணக்கன் பட்டியில் ஒரு அரச மரம் அமைந்துள்ளது. அந்த மரத்தின் அடியில் சுமார் ஒரு அடி உயரமுள்ள விநாயகர் சிலையை வைத்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். இந்த விநாயகர் சிலை அருகில் ராகு, கேது, மூஞ்சுலு போன்ற சிறிய சிலைகளும் இருந்தன. இந்நிலையில் ராகு, கேது சிலைகள் அந்தப் பகுதியில் உள்ள தெருவில் கிடந்துள்ளது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் ஆயக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பார்வையிட்டு, சிலைகளுக்கு எந்த சேதமும் இல்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சிலைகளை வீசிய அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.