Categories
அரசியல் மாநில செய்திகள்

தெரிந்த மாதிரி பேசிய எடப்பாடி…! பணிந்து போன மோடி … ஸ்டாலினை நம்பும் தமிழகம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி, இங்கே எந்த சட்ட ஒழுங்கும் பாதிப்பில்லை. நான் சொன்னேனே என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், 

ஒரே வரியில் 1000 ரூபாய் வயிறு எரியுது,  நீங்கள் எல்லாம் வீட்டில் சிலிண்டர் வாங்கிக் கொண்டுதான் இருப்பீர்கள். ஆயிரம் ரூபாய் சிலிண்டர், எனக்கு பதில் சொல்லுங்க இதுக்கு பதில் பேசுகிறாரா ஓபிஎஸ், மத்திய அரசை எதிர்த்து ஏதாவது பேசுகிறார்களா, வேளாண் சட்டம் திரும்ப பெறப்பட்டது இதுவரை வாய்த் இருக்கின்றார்களா ?  எவ்வளவு ஆதரித்து பேசுகிறார் மதுரை ஏர்போர்ட்ல்…  தெரிந்த மாதிரி எல்லாத்தையும் காமிச்சு கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி.

இன்று சொல்லுங்கள், 500 லிருந்து 700 விவசாயிகளுடைய சமாதியில் எழுதப்பட்ட தீர்ப்பு தான் இந்த வேளாண் பாதுகாப்பு சட்டம் திரும்பப் பெறப்பட்டது என்பது, எத்தனை பேர் தலைநகரினுடைய வாசலில் நின்று மாட்டு வண்டி வைத்துக்கொண்டு, டிராக்டரை வைத்துக்கொண்டு பஞ்சாப் விவசாயிகள் யார் ? என்பதை இந்த நாட்டிற்கு உணர்ந்து விட்டார்கள். அதில் அவர்கள் மாபெரும் வெற்றி பெற்றுவிட்டார்கள்.

நாடாளுமன்றத்தில் நிறைவேறும் வரை விடப் போவதில்லை. மோடி பணிந்ததாக ஒரு வரலாறு இருக்குமேயானால் இங்கே தான் பணிந்து இருக்கிறார், விவசாயிகள் மத்தியில் பணிந்து இருக்கிறார்.முன்னாள் மத்திய அமைச்சர் எந்த காலகட்டத்திலும் வேளாண் சட்டம் வாபஸ் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று சொன்னார், உங்களுக்கு நினைவிருக்கும்…

இப்போ பிரதமர் மோடி வாபஸ் வாங்கிவிட்டார். அதேபோல் நீட்டிலும் இந்த அரசு வெற்றி பெற வேண்டும், வெற்றி பெற்றே ஆகவேண்டும் உறுதிமொழி அளித்து இருக்கிறது. ஆகவே திராவிட முன்னேற்றக் கழக அரசு நீட் இல்லாத நிலையை உருவாக்கி தரும் என்று மக்களோடு மக்களாக நானும் நம்புகிறேன் அது நிச்சயமாக நடக்கும் என தெரிவித்தார்.

Categories

Tech |