ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட படைப்புகளான கே.ஜி.எஃப். திரைப்படங்களை தொடர்ந்து அண்மையில் வெளியாகிய படம் “காந்தாரா”. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கும் இந்த படத்தில் கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்ட பல பேரும் நடித்து இருக்கின்றனர். சென்ற செப்டம்பர் 30ம் தேதி காந்தாரா திரைப்படம் வெளியாகி திரையுலகில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
இப்படத்தில் தெய்வ நர்த்தகர்கள் படும் கஷ்டங்கள் குறித்து கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் காந்தாரா படத்தின் எதிரொலியாக 60 வயதிற்கு மேற்பட்ட தெய்வ நர்த்தகர்களுக்கு மாதம் ரூபாய்.2,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்திருக்கிறது.