Categories
சினிமா

“தென் இந்திய நடிகர் சங்க நிர்வாகிகள்”… நடிகர் ரஜினியை நேரில் சென்று சந்திப்பு…. வெளியான புகைப்படம்….!!!!

சென்னையில் போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தின் வீடு இருக்கிறது. இங்கு தென் இந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் நேரில் சென்று ரஜினிகாந்தை சந்தித்து பேசியிருக்கின்றனர். அப்போது நடிகர் சங்கத்தின் தலைவரான நாசர், துணைத்தலைவர் பூச்சி முருகன், நடிகர் கார்த்தி போன்றோர் பங்கேற்ற இந்த சந்திப்பானது 45 நிமிடங்கள் வரை நீடித்தது.
அதனைதொடர்ந்து நாசர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, மரியாதையின் நிமித்தமாக நடிகர் ரஜினியிடம் பேசியதாகவும், நடிகர் சங்கத்தின் வளர்ச்சி, எதிர்கால திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்கியதாகவும் கூறினார்.

Categories

Tech |