Categories
உலகசெய்திகள்

தென் ஆப்பிரிக்காவில் 2 வருடங்களுக்குப் பின்… பாரதியார் விருதுகள்..!!!!

தென்னாபிரிக்காவில் கடந்த இரண்டு வருடங்களுக்குப் பின் தற்போது பாரதியார் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பார்க் நகரில் கடந்த இரண்டு வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரதியார் விருதுகள் மீண்டும் வழங்கப்பட்டிருக்கிறது. ஜோகன்னஸ்பர்க் நகரில் செயல்பட்டு வரும் சிவஞான சபை சார்பில் கடந்த 2007 ஆம் வருடம் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் தேசிய கவிமணிய சுப்பிரமணிய பாரதியார் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக விருதுகள் வழங்கப்படாமல் இருந்தது. இந்த சூழலில் நடப்பாண்டுகான பாரதியார் விருதுகள் அண்மையில் வழங்கப்பட்டது.

கொரோனா தொற்று பரவல் காலத்தில் நாயக்கர்கள் எனும் மைய கருத்தின் அடிப்படையில் நடப்பாண்டுகான விருதுகள் வழங்கப்பட்டது மொத்தம் 22 தனி நபர்கள் மற்றும் சமூக குழுக்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. மருத்துவர்கள் செவிலியர்கள் போன்றறோருக்கும் தன்னலம் கருதாமல் சேவையாற்றுவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. மேலும் விருதுகள் தொடர்பாக சிவஞான சபையைச் சேர்ந்த மேகி கோவிந்தன் பேசும்போது நடைபாண்டிற்கான பல்வேறு தரப்புகளில் இருந்தும் விருதுக்கான பரிந்துரைகள் வந்துள்ளது. அதிலும் முக்கியமாக கொரோனா தொற்று பரவல் காலகட்டத்தில் தங்களுக்கு பெரும் உதவி புரிந்தவர்களை பலர் விருதுக்காக பரிந்துரை செய்துள்ளனர். மேலும் பரிந்துரை பட்டியலில் இருந்து விருது பெற தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பது பெரும் சிரமமாக இருந்தது என கூறியுள்ளார்.

Categories

Tech |