Categories
மாநில செய்திகள்

தென்மேற்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுக்கு – தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக மக்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல நலத்திட்ட உதவிகளையும், பேரிடர் காலங்களில் அதை கட்டுப்படுத்த்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில் அதை எதிர்கொள்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி மாவட்ட தாலுகா அளவில் அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழுக்கள் அமைக்க வேண்டும் என்றும், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு சிறப்பு வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |