புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததன் மூலம் பாஜகவின் கொள்கை தென் மாநிலத்திலும் வெற்றியை தொடங்கி உள்ளதாக தமிழக பாஜக தலைவர்கள் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு ராகுல் காந்தி வந்து சென்றதால் தமிழகத்திலும் காங்கிரஸ் அழிந்துபோகும் என்று கூறினார். புதுச்சேரியில் எம்எல்ஏக்களுக்கு பேரம் பேசவில்லை எனவும், அந்த குற்றச்சாட்டை ஸ்டாலின் நிரூபிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்திருக்கின்றனர். மேலும், காங்கிரஸ் துடைத்தெறிய பட்டு இருக்கின்றது. காங்கிரஸ் முதலமைச்சரின் இயலாமையால் அவர்களுக்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதனால் தான் அவர்களுடைய எம்எல்ஏக்கள், அவர்களுடைய அமைச்சர்களே பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார்கள்.இதனால் காங்கிரஸ் புதுவையிலும் இல்லாத சூழ்நிலை இருக்கிறது. இனி இந்தியாவில் காங்கிரஸ் எங்கும் இல்லை. தமிழகம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் கூட்டணியில் வந்து இருக்கிறார்கள். அதுவும் ராகுல்காந்தி தமிழ்நாட்டுக்கு வந்த காரணத்தினால் தமிழகத்திலும் காங்கிரஸ் இல்லாத சூழ்நிலை உருவாக கூடும் என எல்.முருகன் தெரிவித்தார்.