அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா,தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ்க்கு எதிராக பிரத்தியேக தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் தென்னாபிரிக்காவில் 501.V2 அல்லது B.1.35 1 எனும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதாக கண்டறியப்பட்டது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது என்றும் மற்ற வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு வீரியம் கொண்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புதிய வகை கொரோனா வைரஸ் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிக்கு கட்டுப்படவில்லை என்று தெரிகிறது. எனவே மாடர்னா நிறுவனம் இந்த உருமாறிய வைரஸ்க்கு பிரத்தியேக தடுப்பூசியை தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.