Categories
தேசிய செய்திகள்

தென்கொரியாவின் புதிய அதிபர்…. வாழ்த்து தெரிவித்த மோடி…. இரு நாட்டு ஒத்துழைப்புக்கு ஆலோசனை….!!

தென்கொரியாவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் யூன் சுக்-யோல் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படார் . அவருக்கு பிரதமர் மோடி  தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததோடு இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை  நடந்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி, தென்கொரிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யூன் சுக்-யோலுக்கு  வெற்றிக்கான வாழ்த்தை தெரிவித்தும் பல்வேறு துறைகளில் இந்தியா – தென்கொரியா இடையேயான சிறப்பு ஒத்துழைப்பிற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்’ என தெரிவித்துள்ளார்
அதோடு, இந்தியா – தென்கொரியா இடையே தூதரக உறவு  ஏற்படுத்தப்பட்ட 50-வது ஆண்டிற்கான  ஆண்டு விழாவை கொண்டாடுவதற்கான விருப்பத்தை இரு தலைவர்களும் வெளியிட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் இந்தியாவுக்கு விரைவில் வருமாறு தென்கொரியாவின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பும் விடுத்துள்ளார்.

Categories

Tech |