முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை தென்காசி மாவட்டத்திற்கு வருவதால் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்ட மு. க. ஸ்டாலின் பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த மாதம் அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் இவர் நாளை தென்காசி மாவட்டத்திற்கு வரவிருக்கிறார். இதற்காக இவர் சென்னையில் இருந்து விரைவு ரயிலில் பயணிக்க இருக்கிறார். பின்னர் பொதுமக்கள், பள்ளி,கல்லூரி மாணவர்கள் என அனைவருக்கும் பயன்படும் வகையில் பல நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர் மாவட்டத்தில் உள்ள முக்கியமான இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்கிறார். இதனால் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.