Categories
சினிமா தமிழ் சினிமா

தூரிகை இறப்பு…. “ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை”…. சீமான் உருக்கம்….!!!!!

தூரிகை இறப்பிற்கு சீமான் உருக்கமான பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் பிரபல பாடலாசிரியரான கபிலன் பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். இவர் கமல் நடிப்பில் வெளியான தசாவதாரம் திரைப்படத்திலும் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவரின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் திரையுலக மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகை நேற்று முன்தினம் இரவு சென்னையில் உள்ள அரும்பாக்கத்தில் இருக்கும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முதல் கட்டமாக பெற்றோர் திருமணத்திற்கு வற்புறுத்தியதால்தான் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்திருக்கின்றது. இதற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, “புகழ்பெற்ற திரைப்பட பாடல் ஆசிரியரும் கவிஞருமான அன்புத்தம்பி கபிலன் அவர்களின் மகள் தூரிகை அவர்கள் மறைவெய்திய செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும் மன துயரமும் அடைந்தேன். உயிருக்கினிய அன்பு மகளை பறி கொடுத்துவிட்டு பேரிழப்பில் சிக்கித் தவிக்கும் தம்பியை ஆறுதல்படுத்தவும் தேற்றவும் சொற்களின்றி கலங்கி தவிக்கிறேன். கொடுந்துயரில் சிக்குண்டிருக்கும் தம்பி கபிலனுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் ஆறுதலை தெரிவித்து அவர்கள் துயரத்தில் பங்கெடுக்கிறேன் என கூறியுள்ளார்.

Categories

Tech |