Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“தூய்மைப் பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்”…. தென்காசி ஆட்சியர் அறிவிப்பு…!!!!

தூய்மைப் பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டுவரும் விடுதிகளில் தூய்மைப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றது. இதில் 10 ஆண்களும் 8 பெண்களும் நியமிக்கப்பட இருக்கின்றனர். நேர்காணல் மற்றும் இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட இருக்கின்றது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

மேலும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 18 முதல் 37 வயது வரையும் பிசிஎம், பிசி, எம்பிசி மற்றும் டிஎன்சி பிரிவினருக்கு 18 முதல் 34 வயது வரையும் மற்ற பிரிவினருக்கு 18 முதல் 32 வயதும் மிகாமல் இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் https://tenkasi.nic.in/notice-category/recruitment என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் உரிய சான்றுகளின் நகல்களை இணைத்து பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒட்டி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர், ரயில்நகர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், தென்காசி-627811 என்ற முகவரிக்கு 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருக்கிறது.

Categories

Tech |